வண்ணாரப்பேட்டையில் குடிஉரிமை சட்டத்திற்கு எதிராகபோராடிக் கொண்டிருந்த இஸ்லாமிய மக்களிடம் அமுமுக சார்பில் கழகப் பொருளாளர் மற்றும் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் வெற்றிவேல் நேரில்சென்று ஆதரவு தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து திரு.வெற்றிவேல் அவர்கள் பேசினார்.
நிகழ்ச்சியில் வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் திரு. சந்தானகிருஷ்ணன் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.